ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தை மிரள வைத்த 5 கிமீ நீள மனித சங்கிலி.. 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

விழுப்புரத்தை மிரள வைத்த 5 கிமீ நீள மனித சங்கிலி.. 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News : போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து 1000க்கும் மேற்பட்ட பள்ளி - கல்லூரி மாணவர்கள் 5 கி.மீ தூரம் பங்கேற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து  விழுப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 கி.மீ தூரம் பங்கேற்ற மனித சங்கிலி  நடைபெற்றது.

விழுப்புரம் நகரில் மாவட்ட நிர்வாகம் மூலம் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த மாபெரும் மனித சங்கிலி பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட ஆட்சியர் மோகன் மனித சங்கிலி பேரணியினை துவக்கி வைத்து பங்கேற்றார்.

இப்பேரணியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம், சுமார் 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மனித சங்கிலி பேரணியாக பிரதான சாலையில் பதாகைகள் ஏந்தி போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், உடல்நலக்கேடு, உயிரிழப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் நின்றிருந்தனர்.

விழிப்புணர்வு பேரணி..

இப்பேரணி காந்தி சிலையிலிருந்து நான்குமுனை சந்திப்பு வரை மாணவ மாணவியர்கள் பங்கேற்ற மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நான்குமுனை சந்திப்பிலிருந்து அரசு சட்டக்கல்லூரி வரை மாவட்ட மகளிர் திட்டம் மூலம் 1,000த்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சட்டக்கல்லூரி,அரசு கலைக்கல்லூரி மற்றும் சமூக ஆர்வலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்பேரணியில் போதைப்பொருட்கள் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வ பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

விழிப்புணர்வு பேரணி..

முதலமைச்சர் ஸ்டாலின்,போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்ற நோக்குடன் வருகின்ற 10.08.2022 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. மறுநாள் 11.08.2022 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த வகையில்,11.08.2022 அன்று மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதன் நோக்கம் வருங்காலங்களில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்த்திடவும், இளைஞர் சமுதாயத்தை நலமுடன் பாதுகாத்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இப்பேரணியானது, விழுப்புரம் நகரில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 5 கி.மீ தூரம் பள்ளி மாணவர்கள், வேண்டாம் வேண்டாம் புகைப்பழக்கம் வேண்டாம் என பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி யும்,மகளிர் சுயஉதவிக்குழுவினர், அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள்,அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல நபர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram