முகப்பு /விழுப்புரம் /

கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு.. விழுப்புரம் அரகண்டநல்லூர் அருகே வீணாகும் தென்பெண்ணை ஆற்று நீர்..

கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு.. விழுப்புரம் அரகண்டநல்லூர் அருகே வீணாகும் தென்பெண்ணை ஆற்று நீர்..

X
வீணாகும்

வீணாகும் குடிநீர்

Villupuram News | விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த டி.தேவனூர் - நாயனூர் கிராமத்திற்கு இடையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதிக்கு விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் படி பூமிக்கு அடியில் குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக கிராமங்களுக்கு குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீறிப்பாய்ந்து குடிநீர் வீணாகி வருகிறது . இந்த உடைந்த பைப்பில் இருந்து சீறி பாய்ந்து வரும், குடிநீரால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் ,தண்ணீரில் நனைந்து வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த உடைந்த பைப்பில் உடனே சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Villupuram