ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்  தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்  தெரியுமா?

விழுப்புரம் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

விழுப்புரம் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Viluppuram Power Cut | விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை (அக்டோபர் 29ஆம் தேதி) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Villupuram