Home /viluppuram /

விழுப்புரம் வாசிகளே மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளதா? மானியம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

விழுப்புரம் வாசிகளே மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளதா? மானியம் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர், பழங்குடியினர், பொதுப்பிரிவினர் மற்றும் மகளிருக்கு மீன் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் புதிய மீன் வளர்க்கவும், குளங்கள் அமைக்கவும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முழுமையாக மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தில் பொது மக்களுக்கு மீன் வளர்ப்பில் முழுமையாக மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு அம்சங்களையும் நாம் பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு விவசாயிகளின் வருமானத்தை 3 மடங்கு உயர்த்திடவும், பொதுமக்களுக்கு மீன் புரத சத்தினை எளிதில் கிடைத்திட வழிவகை செய்திடவும் ஏதுவாக குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழங்குதல், சிறிய அளவிலான மீன் விற்பனை நிலையம் அமைக்க அலங்கார மீன் வளர்ப்பு திட்ட மானியம், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் திட்டம்(கடல், நன்னீர்), புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், நன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம்,

சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்குதல் திட்டம் ஆகிய திட்டங்கள்  பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ம் ஆண்டின்படி மானியம் வழங்கப்படுகிறது.  பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு 60 சதவீத மானியம் வழங்கிட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022-23-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீன்வளநலத்துறை அமைச்சரின் அறிவிப்பில் பண்ணைக்குட்டை வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்களுக்கு 50 சதவீத மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்காணும் திட்டங்களில் பயனடைய விரும்பும் மீன் வளர்ப்பு விவசாயிகள், உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், எண் 10, முதல் தளம், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401, தொலைபேசி எண்: 04146- 259329 என்ற முகவரியில் அலுவலக வேலைநாட்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி