விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார்.
பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழா
தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டி நடத்திட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் அளவில் 23.11.2022 தேதி முதல் மூன்று பிரிவுகளில் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் “விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலைத் திருவிழா போட்டிகளில் பங்குபெற பெயர் பதிவு செய்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கலைத் திருவிழாவானது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை காத்திடும் பொருட்டு நடத்தப்பட்டு வருகிறது.
கலைத்திருவிழாவின் மூலம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை காப்பது ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணருவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.
Also Read: கார்த்திகை தீபம் ஸ்பெஷல்.. தண்ணீரில் எரியும் அதிசய விளக்கு.. அசத்தும் விழுப்புரம் பெண்கள்..
மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்வி படிப்பில் ஆர்வம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் வாசிப்பது, நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்”. என தெரிவித்தார்.
கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவியர்களுக்கு புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மோகன் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் மாணவிகள் ஆர்வமாக நடனமாட ஆரம்பித்தனர் நாட்டுப்புறப்பாடல், வெஸ்டன் டான்ஸ், பரதநாட்டியம் போன்ற பல வகைகளில் நடனமாடி மாணவர்கள் உற்சாகப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, School students, Tamil News, Villupuram