Home /viluppuram /

விழுப்புரம் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி - மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி - மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு!

விழுப்புரம்

விழுப்புரம் - சதுரங்கம்

Villupuram District News : மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா துவக்கி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாணவர்களுடன் செஸ் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து மாணவர்கள் உற்சாகமாக சதுரங்க போட்டியை விளையாட தொடங்கினர் .

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது.

செஸ் விளையாடும் பள்ளி மாவர்கள்


இந்த சதுரங்க போட்டியில் ஏற்கனவே 14 ஒன்றியங்களில் செஸ் போட்டி நடத்தப்பட்டு வெற்றிகண்ட 252 மாணவ, மாணவியர்கள் , தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான இந்த சதுரங்க போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

செஸ் போட்டியில் மாணவர்கள்


மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா துவக்கி வைத்தனர்.

துவக்க நிகழ்ச்சியில் எஸ்பி ஸ்ரீநாதா பேசுகையில்,  “சதுரங்க விளையாட்டு மனதளவில் நம்மை பலப்படுத்தும் என கூறியதுடன் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார் . மேலும் எஸ் பி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களுடன் அமர்ந்து சதுரங்க போட்டியை விளையாடினர்.

செஸ் விளையாடும் பள்ளி மாவர்கள்


குறைந்தபட்சமாக மாணவர்களுக்கு 5 மற்றும் 6 சுற்றுகள் வைத்து இறுதியில் வெற்றி கண்ட மாணவ மாணவியர்களை, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவும் அதனை பார்வையிடவும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் போட்டியில் மாணவர்கள்


இந்த நிகழ்ச்சியில் விழுப்புரத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று உற்சாகமாக சதுரங்க விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் முதல் சுற்றில் வெற்றி கண்ட மாணவர்கள் கூறுகையில் இதுபோன்ற விளையாட்டை விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்படுத்தி தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கு முதலில் நன்றி கூறியதாகவும், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக இறுதி சுற்று வரை சென்று வெற்றி கண்டு வருவோம் என தன்னம்பிக்கையுடன் கூறினார்கள் அரசு பள்ளி மாணவர்கள்.
Published by:Arun
First published:

Tags: Chess, Local News, Villupuram

அடுத்த செய்தி