ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆட்சியர் மோகன்!

விழுப்புரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆட்சியர் மோகன்!

X
District

District Collector Mohan presented the Pongal gift package

Viluppuram pongal gift Distribution | விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூர் கீழ்வாலை மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூர் கீழ்வாலை மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் வழங்கினார்.

அதன் தொடக்க நிகழ்வாக முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூர், கீழ்வாலை மற்றும் கண்டாச்சிபுரம் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெறுவதற்காக வழங்கப்பட்ட டோக்கனில் தெரிவித்துள்ள நாள் மற்றும் நேரத்தினை பின்பற்றி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pongal 2023, Pongal Gift, Villupuram