முகப்பு /விழுப்புரம் /

ரூ.1 லட்சம் பரிசு... சிறந்த திருநங்கை விருது - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ரூ.1 லட்சம் பரிசு... சிறந்த திருநங்கை விருது - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருநங்கைகள்

திருநங்கைகள்

Villupuram District | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கை சாதனையாளருக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

சிறந்த திருநங்கைக்கான விருது குறித்து விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதில், விழுப்புரத்தில் உள்ள திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப்பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும் இவ்விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள்,

https: //awards. tn. gov. in என்ற இணையதள முகவரியில் 01.02. 2023 முதல் 28.02.2023 வரை விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 28. 02. 2023 மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும்.

Must Read : பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

விருது பெற தகுதியுள்ளவர் இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவர் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Transgender, Villupuram