Home /viluppuram /

Villupuram : தேசிய திறனாய்வு தேர்வில் (NMMS) முதலிடம் பிடித்து மாற்றுத்திறனாளி மாணவன் அசத்தல்.!

Villupuram : தேசிய திறனாய்வு தேர்வில் (NMMS) முதலிடம் பிடித்து மாற்றுத்திறனாளி மாணவன் அசத்தல்.!

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District : விழுப்புரம் அடுத்த நன்னாடு பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்ற மாணவன் தேசிய வருவாய் திறன் வழி மற்றும் படிப்பு  உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
மத்திய அரசாங்கம் மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை கையாண்டு வந்துள்ளது. அதில் மாணவர்களுக்கு சில சிறப்பு தேர்வுகள் வைத்து அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்றவற்றை தருகிறது. அதுபோல மாணவர்களுக்கு தேசிய வருவாய் திறன் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை திட்டம் (NMMS - National Means - cum-Merit -Scholarship Examination ) என்ற தேர்வு நடத்தப்பட்டு வருகிறது .

இந்த திட்டத்தின்படி 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள் 9ம் வகுப்பு முதல் +2 வரை படிக்கும் 4 ஆண்டு காலகட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. தேசிய திறன் வருவாய் வழி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு வங்கி கணக்கிற்கே உதவி தொகை வரவு வைக்கப்படும்.

மாணவர் கோகுலகிருஷ்ணன்


இந்நிலையில், விழுப்புரம் அடுத்த நன்னாடு  அரசினர் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 14) 8ம் வகுப்பில் இந்த தேர்வை எழுதியுள்ளார். தற்போது கோகுலகிருஷ்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கோகுலகிருஷ்ணன் மாற்றுத் திறனாளி மாணவர். இந்த தேர்வில் தகுதி பெறுவதற்கு கோகுல் கிருஷ்ணனுக்கு இப்பள்ளியை சேர்ந்த ராம்குமார் என்ற கணித ஆசிரியர் உறுதுணையாக இருந்து, தேர்வில் ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் தீர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோகுலகிருஷ்ணனும் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும் தேசிய திறனாய்வு தேர்வில் 135 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவராக திகழ்கிறார். இந்தத் தேர்வை குறைந்தபட்சம் 4,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர் கோகுலகிருஷ்ணன்


தேர்ச்சி பெற்ற இம்மாணவருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை அரசாங்கம் வழங்குகிறது. அந்த வகையில் இந்த வருடம் கோகுலகிருஷ்ணன் இந்த தேர்வில் வெற்றி கண்டுள்ளார். இந்த பள்ளியில் ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாணவர் இத்தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெற்றோருடன் மாணவர் கோகுலகிருஷ்ணன்


இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் கூறுகையில், இந்த தேர்வில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், எனது பெற்றோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அதுமட்டுமல்லாமல் இந்த வெற்றிக்கு பின்னால் என்னுடைய கணித ஆசிரியர் ராம்குமார் தான் உள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மாணவர் கோகுலகிருஷ்ணன் பயின்று வரும் பள்ளியின் ஆசிரியர்கள்..


மற்ற மாணவர்களைவிட உடலில் பல மாற்றங்கள் உள்ளது எனக்குள். இருந்தாலும் இந்த உடல் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது என புன்னகையுடன் கூறினார்.  வெற்றி பெற்ற கோகுல கிருஷ்ணனுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி