ஹோம் /விழுப்புரம் /

தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி.. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி.. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

X
தீக்குளிக்க

தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

Villuppuram collector office : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதான நாகராஜன். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளன. ஆவின் பாலகம் அமைப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் மாற்றுத்திறனாளிக்கே முதல் உரிமை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மாற்றுத்திறனாளியான நாகராஜ் கடந்த 2021ம் ஆண்டில் இருந்து கஞ்சனூர் மற்றும் செஞ்சி சாலையில் உள்ள கோழிப்பட்டு ஆகிய 2 இடங்களில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு மனு அளித்தார். அவரின் மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மூன்று சக்கர வாகனத்தில் தனது 2 சிறு குழந்தைகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நாகராஜன் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக இதனை கவனித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நாகராஜனிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரனையில் நாகராஜன் தெரிவித்தது, “நான் சில மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆவின் பாலகம் அமைப்பதற்கான மனுவை அளித்து வருகிறேன்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பாக எனக்கு எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. பிள்ளைகளை வைத்து நான் என்ன செய்வது என்று தெரியாமல் கவலை அடைந்து வருகிறேன். எனக்கு வேறு வழி தெரியாததால் இந்த முடிவில் இறங்கினேன்” என்றார் நாகராஜன். இதனையடுத்து பணியில் இருந்த போலீசார் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் இதை தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாகராஜனிடம் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Villupuram