விழுப்புரம் மாவட்டம்மரக்காணம் அருகிலுள்ள கீழ்புத்துபட்டில்அமைந்துள்ள மஞ்சினீஸ்வரர்அய்யனாரப்பன் கோவிலில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லைஎன குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்காணம் அடுத்துள்ள கீழ்புத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மஞ்சனீஸ்வரர் ஐயனாரப்பன் கோயில் உள்ளது . இக்கோயிலுக்கு சொந்தமாக மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் உப்பளங்கள், வணிக வளாகங்கள் உள்ளது.
இதன் மூலம் இக்கோயிலுக்கு வருவாயாக மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து குலதெய்வ வழிபாடு செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமான ஒன்றாகும். இந்த கோவிலுக்கு மட்டும் வித்தியாசமான முறையில் தரையோடு தரையாக நுழைவாயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சில நான்கு சக்கர வாகனங்கள் எடுத்துக்கொண்டு வரும்பொழுது இந்த நுழைவாயில் திறக்க மாட்டார்கள் ஒரு சில விஐபிகள் மட்டும் இந்த நுழைவாயில் திறக்கப்படுகிறது எனவும், சாதாரண மக்களுக்காக இந்த நுழைவாயில் திறக்க மாட்டார்கள் எனவும் இதனால் கோவிலுக்கு வயதானவர்களுக்கு அழைத்து வரும்போது மிக சிரமத்திற்கு ஆளாகிறோம் என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இக்கோவிலில் எவ்வித அடிப்படை வசதியும் அமைக்காததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதனால் கோயிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Temple, Villupuram, Viluppuram S22p13