முகப்பு /விழுப்புரம் /

மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...

மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...

X
மிளகாய்

மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

Villupuram news | விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் மிளகாய் அபிஷேகம் செய்தும், மார்பின் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் உள்ள முத்தோப்பு, முத்தாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த பத்து நாட்களுக்கு முன் கொடியேற்றம் செய்யப்பட்டு தினந்தோறும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

பங்குனி உத்திர விழாவினை முன்னிட்டு அலகு குத்தியும்,காவடி எடுத்தும், மிளாகய் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முத்தோப்பு முருகன் கோவிலில் முக்கிய நிகழ்வான குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள் மார்பின் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து நேர்த்தி கடனை செலுத்தினால் நிச்சயம் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதியில் நிலவுவதால், இந்த நேத்திக்கடனை பக்தர்கள் பயபக்தியுடன் செய்து முடித்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Villupuram