முகப்பு /விழுப்புரம் /

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு வடை எடுத்து பிள்ளையார்குப்பம் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு வடை எடுத்து பிள்ளையார்குப்பம் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

X
கொதிக்கும்

கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்த பக்தர்கள்

Villupuram News | விழுப்புரம் அருகேயுள்ள பிள்ளையார்குப்பத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடை எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்திலுள்ள பிள்ளையார் குப்பத்திலுள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி எடுத்தும், உடலின் மீது மிளாகாய் பொடியை பூசியும் நேர்த்தி கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து சில பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் உள்ள வடையை கையால் எடுத்தனர்.

இதையும் படிங்க | உடலில் சேறு, தலையில் கோழி இறகு... கோயில் திருவிழாவில் நடந்த விநோத வழிபாடு...!

எண்ணெய் சட்டியில் வெறும் கையால் எடுக்கப்பட்ட வடையை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் 50 ரூபாய் செலுத்தி வடையை பெற்று கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Villupuram