விழுப்புரம் திரு.வி.க சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ராம பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுமனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் புறனமைப்பு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. மூலவர் பாலாயணம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று காலை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையும் படிங்க : முதல் பரிசு ரூ.10 லட்சம்... விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு
இதேபோல், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் உள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயில் பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. 1008 வடைகள் கோர்க்கப்பட்ட மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, நெய் விளக்குகளை ஏற்றி சுவாமி வழிபட்டனர். மேலும் ஆஞ்சநேயர் நாமத்தை கூறி பக்தர்கள் வழிபட்டனர்.
செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram