ஹோம் /விழுப்புரம் /

அத்திப்பழம் சாகுபடியில் நிலையான மாத வருமானம்.. வழிகாட்டும் விழுப்புரம் விவசாயி..

அத்திப்பழம் சாகுபடியில் நிலையான மாத வருமானம்.. வழிகாட்டும் விழுப்புரம் விவசாயி..

விழுப்புரம்

விழுப்புரம் - அத்திப்பழம் சாகுபடியில் அசத்தல் மாத வருமானம்..

Fig Cultivation at Villupuram | விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத், கானை தாலுகாவிலேயே முதல் நபராக அத்திப்பழங்கள் சாகுபடியை தொடங்கியிருக்கிறார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

அத்திப்பழங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதால் விழுப்புரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அத்திப்பழம் விவசாயத்தை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளார். அத்திப்பழம் சாகுபடி முறைகள் குறித்த பல்வேறு தகவல்களை அவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்வதற்காக கானை தாலுகாவின் வெங்கந்தூர் கிராமத்தில் உள்ள அவருடைய அத்திப்பழ தோட்டத்துக்கு ஒரு விசிட் அடித்தோம்.

வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத், கானை தாலுகாவிலேயே முதல் நபராக அத்திப்பழங்கள் சாகுபடியை தொடங்கியிருக்கிறார். இவர் விவசாயத்தில் புது புது முயற்சிகளை அவ்வப்போது செய்து வருவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். தற்போது அத்திப்பழ சாகுபடியில் இறங்கியுள்ளார்.

அத்திப்பழம் சாகுபடி குறித்து சம்பத் கூறியதாவது, “விவசாயத்தில் ஏதேனும் மாற்று பயிரை விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திப்பழம் சாகுபடியை கையில் எடுத்தேன் . அதுமட்டுமல்லாமல் அத்திப்பழம் சாகுபடி குறைந்த நாட்களில் அதிக லாபத்தை எடுக்க முடியும் என்பதால் அத்திப்பழத்தை சாகுபடி செய்ய முடிவு செய்தேன்.

மேலும் படிக்க:  கலைத்துறையில் ஜொலிக்க வழிபடவேண்டிய கோவில் - விழுப்புரம் சிவலோகநாதர் சிறப்புகள்

பயிரிட தேவையான அத்தி செடிகளை செங்கல்பட்டு மாவட்டம் கீழ் அத்திவாக்கம் பகுதிக்கு சென்று சென்று ஒரு ஏக்கருக்கு தேவையான 840 செடிகளை வாங்கினோம். ஒரு செடியின் விலை 90 ரூபாய்க்கு விற்பனையானது. அத்திப்பழ செடிகளில் பல ரகங்கள் உள்ளன அதில் நான் செடிகளில் காய்க்கும் பூனா ரெட் என்ற ரகத்தை தேர்வு செய்தேன். இதன் ஆயுட்காலம் 20 வருடங்களாகும். செடி நட்ட ஆறு மாதத்திலேயே நம் பழங்களை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம்.

அத்திப்பழம் சாகுபடியில் அசத்தல் மாத வருமானம்..

இந்தச் செடிகளை பெரிய மரங்களாக வளர்க்க விடாமல் , செடியிலே பழங்களைப் பறிக்க அளவில் செடிகளை வளர்க்க வேண்டும். இந்தப் பழம் பார்ப்பதற்கு வெளியே பச்சை நிறமாகவும் உள்ளே பிங்க் நிறமாகவும் காணப்படும். இந்த பழக்கத்தை ஜூஸ் போடுவதற்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்திப்பழம் நடவு செய்ய எல்லா வகை மண் ரகமும் ஏற்றது. இப்பயிர்க்கு பட்டம் ஏதும் கிடையாது. தேர்வு செய்த நிலத்தில் ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 10 அடி மற்றும் செடிக்குச்செடி 7 அடி இடைவெளியில், ஒரு அடிச் சுற்றளவில் இரண்டடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க:  ஆவின் நிறுவனத்தின் தள்ளுபடி அறிவிப்பு.. விழுப்புரம் மக்களுக்கு தித்திப்பான செய்தி..

10 நாள்கள் வரை குழிகளை ஆறவிட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ தொழுவுரம், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் சூடோமோனஸ் கலந்து அடியுரமாக வைக்க வேண்டும். அதன்பின் செடிகளை அந்த குழியில் நடவேண்டும்.

அத்திப்பழம் சாகுபடியில் அசத்தல் மாத வருமானம்..

நாங்கள் ட்ரிப்ஸ் மூலம் செடிகளுக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீரை தருகிறோம். நாங்கள் வைத்துள்ள செடிகளில் அந்த அளவிற்கு பூச்சி தொல்லைகள் ஏதும் தென்படவில்லை. அப்படிப் பூச்சி தொல்லை தென்பட்டால், மூலிகை பூச்சி விரட்டி ( இஞ்சி பூண்டு கரைசல் , எருக்கம் பூ கரைசல் ) பயன்படுத்தி பூச்சிகளை விரட்டி அடித்து விடுவோம்.

மேலும் படிக்க:  விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளதா..!

மாற்றுப் பயிரை பயிரிட்டதால் தோட்டக்கலை துறையின் மூலம் எனக்கு இலவசமாக சொட்டு நீர் பாசன வசதியை செய்து தந்தார்கள், மானியமும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த சாகுபடியில் ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் தோட்டக்கலை அதிகாரிகள் விவசாய நிலத்திற்கு வருகை புரிந்து செடிகளை பார்த்து தெளிவாக அதற்கு உரிய விளக்கங்களை அளிக்கிறார்கள். இது இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

அத்திப்பழம் சாகுபடியில் அசத்தல் மாத வருமானம்..

அத்தி விவசாயத்தில் சவால்கள் என்னவென்றால், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செடிகளை கொண்டு வரும் போது 1O0 செடிகள் நிச்சயமாக டேமேஜ் ஆகியிருக்கும் இதனை சமாளிக்க நாம் மறுபடியும் செடிகளை வாங்க வேண்டும், அதுபோல செடியின் விலையும் அதிகம் என்பதால் இதனை சமாளிக்க கஷ்டமாக இருக்கும் .முதலில் அத்தி பழம் சாகுபடியில் லாபம் பார்ப்பது கஷ்டம் தான் அதன் பிறகு நல்ல பராமரிப்பு இயற்கை உரம் அளித்து நிச்சயமாக அத்திபழம் சாகுபடியில் லாபத்தைப் பார்க்க முடியும்.

தற்போது சந்தைகளிலும் அத்திப்பழத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் பலரும் அத்திப் பழங்களை விரும்பி வாங்குகிறார்கள். சத்து நிறைந்த உள்ள இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. எனவே நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் கொஞ்சம் பழங்கள் அறுவடை செய்தாலும் சந்தையில் நல்ல லாபத்தைப் பார்க்க முடியும்.

அத்திப்பழம் சாகுபடியில் அசத்தல் மாத வருமானம்..

நான் அத்திசெடிகள் வைத்து ஒரு வருடம் ஆகிறது.நான் ஆறு மாதத்தில் இருந்தே அத்திப் பழங்களை அறுவடை செய்ய ஆரம்பித்துவிட்டேன். நாளைக்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 கிலோ வரை பழங்களை சாகுபடி செய்கிறோம். கிலோ 150 ரூபாய் முதல் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் அறுவடை செய்யும் அத்திப்பழத்தை விழுப்புரம் சுற்றியுள்ள பல ஜூஸ் கடைகள், உள்ளூர் களிலும் அனுப்பி வைக்கிறோம்.

ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறோம்.

இன்னும் செடிகளின் நல்ல முறையில் பராமரித்து நல்ல ஊட்டச்சத்து அளித்து வந்தால் நாளைக்கு 25 கிலோ அத்தி பழங்களை நாம் அறுவடை செய்யலாம். எதிர்காலத்தில் இந்த அத்திப்பழங்களை இன்னும் பெரிய அளவில் கொண்டு சென்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே நோக்கமாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விவசாயிகள் நிலையான ஒரு வருமானத்தை ஈட்டுவதற்கு இது போன்ற மாற்று பயிர்களை கையில் எடுத்துக்கொண்டு அதிக லாபம் பார்க்கலாம் உதாரணத்திற்கு அத்திப்பழங்கள் டிராகன் புரூட் போன்ற பயிர்களைப் பயிரிடலாம் என மற்ற விவசாயிகளுக்கு சம்பத் ஆலோசனையும் வழங்கினார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram