Home /viluppuram /

ஒரே நேரத்தில் 11 வகை நெல் சாகுபடி செய்யும் விழுப்புரம் விவசாயி.. இயற்கை விவசாயத்தில் இப்படியும் லாபம் பார்க்கலாமே..!

ஒரே நேரத்தில் 11 வகை நெல் சாகுபடி செய்யும் விழுப்புரம் விவசாயி.. இயற்கை விவசாயத்தில் இப்படியும் லாபம் பார்க்கலாமே..!

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Organic Farming | விழுப்புரம் அய்யூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் ஒரே நேரத்தில் 11 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார். இயற்கை விவசாயத்தில் எந்த அளவு வருமானம் ஈட்ட முடியும் என்பது குறித்து அறிய முருகனிடம் பேசினோம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். ஏற்கனவே பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டு மகசூல் ஈட்டி லாபம் பார்த்து வந்தவர், அதன்பின் இயற்கை விவசாயம் பற்றிய பல கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பங்கேற்றுள்ளார். வயலில் விளைந்த நெல் ரகத்தை இயற்கை பாரம்பரிய விதைத் திருவிழா போன்ற கண்காட்சியில் இடம்பெற செய்து மற்ற விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், விவசாயி முருகன் அவருடைய வயலில் சிவன் சம்பா, துளசி வாசனை சம்பா,மாப்பிள்ளை சம்பா, இலுப்பைப் பூ சம்பா, தூய மல்லி, மல்லிகைப்பூ சம்பா, சீரகசம்பா, ரத்த சாலி, செங்கல்பட்டு சிறுமணி, வெள்ளைப்பொன்னி, கருப்புகவுனி போன்ற 11 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.

இயற்கை விவசாயத்தில், பாரம்பரிய ரகங்களில் லாபம் எடுக்க முடியுமா என்பதைப் பற்றி விவசாயி முருகனிடம் பேசினோம்..
“என்னுடைய வயலில் 11 நெல் ரகங்களை பயிரிட்டுள்ளேன். இது சம்பா பருவம் என்பதால், இப்பருவத்தில் விளையக்கூடிய அனைத்து நெல் வகைகளையும் பயிரிட்டுள்ளேன். பயிரிட்டுள்ள நெல் ரகங்களின் பருவ காலம் வெவ்வேறாக இருக்கிறது.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

மாப்பிள்ளை சம்பா 160 நாட்களில் விளையக்கூடியது, சிவன் சம்பா 140 நாட்களில் விளையக்கூடியது, தூயமல்லி 135 நாட்களில் விளையக்கூடியது. இதுபோல ஒவ்வொரு நெல் ரகத்திற்கும் பருவ காலம் மாறிக்கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க:  விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

பயிரிடப்பட்டுள்ள நெல் ரகங்கள் மூலம் ஒவ்வொரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 நெல் மூட்டைகளை பெறலாம். ஒரு ஏக்கரில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம். பாரம்பரிய நெல் ரகத்திற்கு தேவை அதிகரிக்கும் போது கூடுதலாகவே இன்னும் விலை போகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதலில் வயலை இயற்கை முறையில் பதப்படுத்தி பின் நாற்றங்கால் விட வேண்டும். நாற்றாங்காலில் பூச்சித் தொல்லைகள் இருந்தால் இயற்கை முறையில் ரசாயன உரங்களான ஜீவாமிர்தம் அமிர்த கரைசல் போன்றவை பயன்படுத்திக் கொள்ளலாம். நிச்சயமாக இயற்கை விவசாயத்தில் லாபம் பார்க்க முடியும். மற்ற விவசாயிகளும் நிச்சயமாக இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக்க வேண்டும் எனவும் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி