Home /viluppuram /

பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள ஆட்சியர் உத்தரவு..!

பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள ஆட்சியர் உத்தரவு..!

விழுப்புரம்

விழுப்புரம்

2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் 13.06.2022 அன்று திறப்பதை முன்னிட்டு           நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி துறைகள் ஒருங்கிணைந்து தூய்மைப்பணிகளை மேற்கொண்டு அனைத்து பள்ளிகளும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் என்று ஆலோசனை கூட

மேலும் படிக்கவும் ...
    பள்ளிகள் திறப்பது குறித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் 13.06.2022 அன்று திறப்பதை முன்னிட்டு நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி துறைகள் ஒருங்கிணைந்து தூய்மைப்பணிகளை மேற்கொண்டு அனைத்து பள்ளிகளும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறுகையில், தமிழ்நாடு அரசு உத்தரவிற்கிணங்க வரும் கல்வி ஆண்டிற்கு (2022-23) 13.06.2022 அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதனையொட்டி அனைத்து தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளை திறந்து ‘நம் குப்பை - நம் பொறுப்பு" என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகள் மற்றும் இலை சருகுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்

    பள்ளிகளை சுத்தமாக வைத்திருத்தல்,வகுப்பறைகள், கழிப்பறைகள்,குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றினை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள கிராம தூய்மை பணியாளர்கள் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு அனைத்து பள்ளிகளிலும் துய்மை பணிகளை மேற்கொண்டு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும்,
    அரசு அறிவுறையின்படி நடப்பு கல்வியாண்டில் அதிகளவு அரசு பள்ளிகளில் மாணாக்கர்கள் சேர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்களால் பள்ளிகள் பார்வையிடப்படவுள்ளதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் வருகைப்புரிந்து உரிய பணியாளர்களைக் கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளை தூய்மையாக வைப்பதனை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அனைத்து பள்ளிகளையும் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், சங்கர்திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் காஞ்சனா,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா,துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Tn schools, Villupuram

    அடுத்த செய்தி