மரக்காணம் - திண்டிவனம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - மரக்காணம் இடையே இரு வழிச்சாலையாக இருந்தது.இந்த வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 296 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 03.08.2022 அன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருவழிச்சாலையை விரிவுபடுத்தி 4 வழிச்சாலையாக அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சாலையோரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து மின்கம்பங்களும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், சிறிய பாலங்களை பெரிய பாலங்களாக மாற்றியமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட சில இடங்களில் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை மாநில நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் சத்திய பிரகாஷ், மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
நான்கு வழி சாலை அமைக்கும் பணி தொடங்கி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் 20 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை 21 மாதங்களில் முடிக்க வேண்டும் என்பதால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram