Home /viluppuram /

வண்ண மீன்கள், டைனோசர் கண்காட்சி- ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்

வண்ண மீன்கள், டைனோசர் கண்காட்சி- ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்

விழுப்புரம்

விழுப்புரம் கண்காட்சி

விழுப்புரம் ரெட்டியார் மில் பகுதியில் நடைபெற்ற டைனோசர், வண்ண மீன்கள் கண்காட்சியைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

விழுப்புரம் அடுத்து கிழக்கு பாண்டி, ரெட்டியார் மில் பகுதியில் ஜெய்சக்தி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் டைனோசர், வண்ண மீன்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது . இந்த கண்காட்சியை காண்பதற்கு பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வமாக வருகிறார்கள்.

விழுப்புரம் அடுத்து கிழக்குபாண்டி சாலையில் அமைத்துள்ளது ஜெயசக்தி திருமணம் மண்டபம் உள்ளது. இங்கு ஒருவாரத்திற்கு டைனோசர் உலகக் கண்காட்சி மற்றும் வண்ண மீன்கள் கண்காட்சி, காஞ்சனா பேய் வீடு, உணவுக் கண்காட்சி, பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் கண்காட்சி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், சைக்கிள் கண்காட்சி ஆகியன இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சி என்ற இறுதி நாள் என்பதால் இதனைக் காண்பதற்கு, பொதுமக்கள் ஆர்வம்.

டைனோசர் முன்பு செல்பி எடுக்கும் மக்கள்


மேலும் 20 வகைக்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், ப்ளூ கோல்ட், ஒயிட் கோல்ட், அக்வாரியம் போன்ற பல வகைகளை சார்ந்த மீன்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் டைனோசர்கள் உலக கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் டைனோசர் முட்டை, டைனோசர்கள் கத்துவது போன்று காட்சிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

மீன்களைப் பார்வையிடும் மாணவர்கள்


விழுப்புரத்தில் இந்த கண்காட்சி முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதால், கண்காட்சியைக் காண்பதற்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் ஏராளமான பொது மக்கள் ஆர்வமாக இந்த கண்காட்சியை கண்டு களித்து மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து செல்கின்றனர். இந்த கண்காட்சியை காண்பதற்கு நுழைவு கட்டணமாக 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டைனோசர்


கண்காட்சி குறித்து, கண்காட்சியைக் கண்டுகளித்த பொதுமக்கள் கூறுகையில், முதன்முறையாக விழுப்புரத்தில் இதுபோன்ற கண்காட்சி நடைபெறுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. டைனோசர் வண்ண மீன்கள் போன்ற பல வகைகளில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் வந்து கண்டுகளிக்க ஏதுவாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி