ஹோம் /விழுப்புரம் /

இடைநின்ற மாணவர்களுக்கு மீண்டும் கல்வி.. அதிரடி உத்தரவு பிறப்பித்த விழுப்புரம் ஆட்சியர்..

இடைநின்ற மாணவர்களுக்கு மீண்டும் கல்வி.. அதிரடி உத்தரவு பிறப்பித்த விழுப்புரம் ஆட்சியர்..

விழுப்புரம் கலெக்டர்

விழுப்புரம் கலெக்டர்

Viluppuram District News : விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய 19,631 குழந்தைகள் மீண்டும் கல்வி கற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் வருகையை 100 சதவீதம் உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வராமல் இருக்கும் குழந்தைகள், 8ம் வகுப்பு முடிக்காமல் இடை நிற்கும் குழந்தைகள், பள்ளி செல்லாத குழந்தைகள் போன்றவர்களை பள்ளி செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் என கருதப்படுவார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 19,631 குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கண்டறிந்து பள்ளிகள் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்திட வட்டார வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் உதவி திட்ட அலுவலர் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் மூலம் தொழிற்சாலை பகுதிகள்,குடிசை பகுதிகள்,மலை பகுதிகள்,பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் சொன்ன முக்கியத் தகவல்!

குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்த்திட 105 வட்டார வள மைய ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் 1409 தலைமையாசிரியர்கள் 7393 ஆசிரியர்கள் என மொத்தம் 8907 கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் சேர்க்கை விபரங்கள் குறித்து TN-SED-SCHOOLS என்ற செயலியில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இடைநின்ற குழந்தைகள் மாறுதலாகி சென்ற குழந்தைகளின் விவரங்கள் EMIS கல்வி தரவு தளத்தில் பொது தகவல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கணக்கெடுப்பு பணியின் போது, சிறப்பு கவனம் செலுத்தி பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்த்திட வேண்டும்.இக்கணக்கெடுப்பு களப்பணியை வரும் 11.01.2023 க்குள் முடித்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கணக்கெடுப்பு சார்ந்த இப்பணிகளை இடம் குறித்த தகவலுடன் புகைப்படங்களாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்பணியினை உரிய காலத்திற்குள் முடித்திட கல்வித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,காவல் துறையினர்கள் ஆகியோர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகன் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Local News, Vizhupuram