ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மோகன்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villuppuram District News : விழுப்புரத்தில் பெய்து வரும், தொடர்மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதாரப்பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாக தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிக் கட்டிடங்களின் நிலைத்தன்மை, பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியில் உள்ள கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும், மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழ்நிலைகளை உருவாக்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல அரசு பள்ளிக்கூடங்களில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில், தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதாரப்பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : விழுப்புரம் விவசாயிகளே.. பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் பெறனுமா.. உடனே இதை செய்யுங்க!

மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுவதை சரிசெய்திட வேண்டும் எனவும், பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களை உடனடியாக அகற்றிட உத்தரவிட்டதுடன் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையினை நாள்தோறும் சுகாதாரமான முறையில் தூய்மை செய்து சுத்தமாக வைத்துக்கொள்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உடன் இருந்தார்.

First published:

Tags: Local News, Vizhupuram