ஹோம் /விழுப்புரம் /

Villupuram News : 'எண்ணும் எழுத்தும்' திட்ட பயிற்சி வகுப்பு - ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர்

Villupuram News : 'எண்ணும் எழுத்தும்' திட்ட பயிற்சி வகுப்பு - ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram News : விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வட்டார அளவிலான பயிற்றுநர்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

வட்டார அளவில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பு ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர். எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் 41923 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வின்போது தெரிவித்தார்.

விழுப்புரம்,சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வட்டார அளவிலான பயிற்றுநர்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் பெறவேண்டும் என்பதே ஆகும். மாணவர்களுக்கு வாய்மொழியாக சொல்லித்தரும் கல்வியினை விட செயல்விளக்கத்தின் மூலம் கல்வி கற்பிக்கப்படும்பொழுது கற்றல் திறன் மேம்படும். ஆகையால் இத்திட்டம் துவக்கப்பள்ளி நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3-ஆம் வகுப்புக் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க :   ரூ.25,000 சம்பளம்... புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை... எக்ஸாம் இல்லை - உடனே விண்ணப்பியுங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் பருவங்கள் முடிந்த நிலையில், ஜனவரி 2023-ஆம் ஆண்டு முதல் மூன்றாம் பருவம் தொடங்குவதை முன்னிட்டு வட்டாரத்திற்கு 10 பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு 130 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 19.12.2022 அன்று கணக்குப்பாடமும் 20.12.2022 இன்று தமிழ் பாடமும் மற்றும் 21.12.2022 அன்று ஆங்கிலப் பாடத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வட்டார அளவில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜனவரி 2,3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பயிற்சி வழங்கவுள்ளனர்.

இதன் மூலம் 1052 அரசுப்பள்ளிகள் 189 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1241 பள்ளிகளைச் சேர்ந்த 1770 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 41923 பள்ளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் படிக்க : வைரலாகும் மோடி பொம்மை... மதுரையில் பொதுமக்கள் ஆர்வம்..

மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆரம்பப்பள்ளி படிக்கும்பொழுது அவருடைய ஆசிரியர்கள் பறவையினை உதாரணமாக வைத்தும் செயல்விளக்கத்தின் மூலம் வைத்து காட்டியதன் காரணமாக அதன்மூலம் ஈர்க்கப்பட்டு பிற்காலத்தில் விமான பொறியியல் கல்வி பயின்றதாகவும் அதன் மூலமாகவே தனது பணி அமைந்ததாகவும்,பல்வேறு நிகழ்வுகளில் தெரிவித்துள்ளார்.

அதுபோல,பள்ளிக்குழந்தைகள் பிற்காலத்தில் பல்வேறு துறைகளில் சாதிக்க தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியினை ஆசிரியர்கள் வழங்கிட வேண்டும். எனவே சமூகம் சார்ந்த முன்னேற்றத்திற்கு ஆரம்பப்பள்ளிக் கல்வி மிகவும் இன்றியமையததாகும். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகளை சந்திக்க வேண்டி நிலை உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே மாணவர்களின் தன்னம்பிக்கையினை அதிகரிக்கும் வகையில் கல்வி பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பான முறையில் அமைய மிகுந்த கனிவுடனும் பொறுப்புடனும் அனைவரும் இணைந்து கல்வி கற்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Villupuram