ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தனியார் இல்லங்கள், தங்கும் விடுதிகளுக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை.!

விழுப்புரத்தில் தனியார் இல்லங்கள், தங்கும் விடுதிகளுக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை.!

விழுப்புரம்

விழுப்புரம்

Viluppuram District | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  அரசு மற்றும் தனியார் இல்லங்கள், தங்கும் விடுதிகள் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இல்லங்கள், தங்கும் விடுதிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் விடுதிகள், இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் மோகன் பேசியதாவது: “பாதுகாப்பான சூழ்நிலையில் எவ்வித இடையூறும் இல்லாமல் பெண்கள் தங்கி பணிபுரிய வேண்டும் என்பதற்காக மகளிர் தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் விடுதிகளுக்கு அரசின் சார்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிற ஊர்களிலிருந்து வரும் மாணவ, மாணவிகள் தங்கி பயில்வதற்காக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பள்ளி, கல்லூரி விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கலைத்துறை பயிற்சி வகுப்புகள் - விழுப்புரம் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு மற்றும் தனியார் விடுதிகளும், 15 இல்லங்களும் செயல்பட்டு வருகின்றன. தனியார் விடுதி மற்றும் இல்லங்களை பதிவு செய்வதற்கு தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட விடுதி கட்டிடத்திற்கான உரிமைச்சான்று, சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட கட்டிட உறுதித்தன்மை சான்று, சுகாதார ஆய்வாளரிடமிருந்து பெறப்பட்ட சுகாதார சான்று, தீயணைப்புத்துறையிடமிருந்து பெறப்பட்ட தீ பாதுகாப்பு சான்று, காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட காவல் சரிபார்ப்பு சான்று,

நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் ஆடிட்டரிடமிருந்து பெறப்பட்ட தணிக்கை அறிக்கை, குழந்தைகள் மையத்திலிருந்து பெறப்பட்ட சான்று, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட விவரம், பெயர் பலகை, சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்ட சமையற்கூடம், சமையல் பாத்திரங்கள் குறித்த விவரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்துடன் விடுதி கட்டிடம், தங்குமிட வசதி, விடுதி கட்டிட வரைபடம், விடுதி பணியாளர்கள் விவரம், விடுதியில் வழங்கப்பட்டு வரும் உணவு விவரம், விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆண்டறிக்கை, விடுதி வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஓராண்டிற்கான வங்கி அறிக்கை போன்ற விவரங்களுடன் விண்ணப்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து புதியதாக விடுதி பதிவு செய்பவர்கள் அல்லது புதுப்பிக்க வேண்டியவர்கள் வரும் அக்டோபர் 18ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட விடுதிகள், இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram