Home /viluppuram /

தேங்காய் பூ விற்று நாள் ஒன்றுக்கு ரூ.2000 சம்பாதிக்கும் வியாபாரி..

தேங்காய் பூ விற்று நாள் ஒன்றுக்கு ரூ.2000 சம்பாதிக்கும் வியாபாரி..

Profit

Profit from Coconut Flower Sales - Merchant Happiness

Villupuram District: விழுப்புரத்தில் ரங்கநாதன் சாலை, மந்தக்கரை பகுதியில் தேங்காய்ப்பூ வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முறையாக கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களை தவிர்க்க தேங்காய் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுவாக தென்னை, பனை மரங்களின் அனைத்து பொருட்களுமே உடலுக்கு நன்மை தரக் கூடியவை. ஆனால் இவற்றின் அருமை மக்களுக்கு புரிவதில்லை.

    தற்போது ஒரு சில மாவட்டங்களில் பனை பூ, குருத்து மற்றும் தேங்காய் பூ, குருத்து விற்பனை செய்கின்றனர். கேரளாவில் மட்டும் விற்பனையாகி வந்த தேங்காய் பூக்கள், பொள்ளாச்சி, சென்னை திருச்சி நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் விற்க ஆரம்பித்துள்ளனர். அதுபோல விழுப்புரத்திலும் ரங்கநாதன் சாலை, மந்தக்கரை பகுதியில் விற்பனை செய்கின்றனர்.

    தேங்காய் பூ விற்பனை குறித்து வியாபாரி மணி கூறுகையில், 'என்னுடைய சொந்த ஊர் திருக்கோவிலூர் நான் தற்போது மடப்பட்டு கிராமத்தில் உள்ளேன் .முதலில் நான் மூங்கில் வியாபாரம் செய்து வந்தேன். அதன்பிறகு சென்னையில் பழ வியாபாரம் செய்து வந்தேன்.

    அதனை அடுத்து உள்ளூர்களில் தேங்காய் பூ விற்பனை செய்யலாம் என நினைத்து, தற்போது தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறேன். இதற்கான தேங்காய் பூக்களை ஆந்திர மாநிலம் சித்தூர் போன்ற பகுதியில் இருந்து வர வைக்கிறேன். 50 ரூபாய், 80, 100, 120 போன்ற விலையில் விற்பனை செய்கிறேன்.

    ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 தேங்காய் பூ முதல் 150 பூக்கள் விற்பனை செய்கிறேன். ஒரு நாளைக்கு 1500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

    இது கோடைகாலம் என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் தேங்காய் பூவை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.இந்த தேங்காய் பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    பொதுமக்கள் முன்னிலையிலேயே தேங்காயை உடைத்து பூக்களை வெளியில் எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி தருகின்றனர். இந்த பூவை 6 மணி நேரம் வரை வைத்து சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் போட்டு பதப்படுத்தி சாப்பிடலாம்.

    இனிப்பு சுவையாகவும் , பஞ்சு போல் இருக்கும் இந்த தேங்காய் பூவை உண்பதால், வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாவதாகக் கூறப்படுகிறது. இளநீரை விட கூடுதல் விலை என்றாலும், மருத்துவ குணமுள்ள இயற்கையான உணவுப்பொருள் என்பதால், பலரும் இதை விரும்பி வாங்குகின்றனர். தேங்காய் பூ விற்பனை செய்வதில் மிக்க மகிழ்ச்சி என மன நிறைவுடன் கூறினார் வியாபாரி மணி.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி