முகப்பு /செய்தி /விழுப்புரம் / "மெத்தனால் சாராயத்தால் உயிரிழப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

"மெத்தனால் சாராயத்தால் உயிரிழப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Cm mk stalin pressmeet | உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் வழங்கப்படும். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் வழங்கப்படும் - முதலமைச்சர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் கனவத்திற்கு வந்தவுடன் விழுப்புரம் மருத்துவ கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனர். 9 பேர் இறந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்க்ளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இறப்பிற்கு மெத்தனால் சாராயாம் தான் காரணம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் ஐந்து பேர் இறந்துள்ளனர். இதிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் வழங்கப்படும். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் வழங்கப்படும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு எந்தவித தயவுதாட்சனம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

top videos

    செய்தியாளர் : குணாநிதி

    First published:

    Tags: CM MK Stalin, MK Stalin, Villupuram