ஹோம் /விழுப்புரம் /

பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகள்.. விழுப்புரத்தில் தொழிலாளர்கள் மும்முரம்..

பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகள்.. விழுப்புரத்தில் தொழிலாளர்கள் மும்முரம்..

X
பொங்கலுக்கு

பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகள்

Viluppuram News : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் உள்ள அகரம் , கோலியனூர், அய்யன் கோவில் பட்டு போன்ற பகுதிகளில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் உள்ள அகரம், கோலியனூர், அய்யன் கோவில்பட்டு போன்ற பகுதிகளில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. இப்பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர்.

இதற்காக விழுப்புரம் அருகே சாலை அகரம், ராகவன் பேட்டை, அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளி மாவட்டங்களுக்கு, புதுச்சேரி மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பருவ மழையை கருத்தில் கொண்டு சற்று முன்னதாகவே மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : அலங்கார நகைகள் தயாரிப்பதில் ஆர்வமா..? விழுப்புரத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது..

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. பானைகளுக்கு சாயம் பூசுவது போன்ற இறுதிக்கட்ட பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகளை வரை இங்கு தயாரித்து வருகின்றனர். அதாவது 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை மண்பானைகள் உள்ளது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட பானைகளை நன்கு உலர வைத்து பின்னர் சூளைபோட்டு வேக வைக்கின்றனர். பின்பு வேக வைத்த மண்பானைகளில் சாயம் பூசப்பட்டு உலர வைக்கப்படுகிறது.

இதுபற்றி சாலை அகரம் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் சிவஞானம் கூறுகையில், ”நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். வருடத்தில் கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்துதான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது.

சுவையும், ஆரோக்கியமும் தந்த மண்பானை சமையல் தற்போது கிராமங்களில் கூட அரிதாகி வருகிறது.ஆனால் தற்போது உள்ள பொதுமக்கள் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டு மீண்டும் மண் பாண்டங்களை பயன்படுத்தி வருவதால், மக்களின் தேவைக்காக ஆண்டுதோறும் மண் பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

எதிர்பார்த்த அளவிற்கு தற்போது இந்த வருடம் நல்ல ஆடர்கள் வந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு சார்பில் மண் பானைகளை கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து மண் பானையையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது தற்போது பொங்கலை விட்டு இனி வரும் காலங்களில் நிச்சயமாக பொங்கல் தொகுப்புடன் மண்பானை சேர்த்து தர வேண்டும்” என மண்பானை தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Vizhupuram