ஹோம் /விழுப்புரம் /

தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பிய மக்கள்.. தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பிய மக்கள்.. தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News | சென்னை மாநகரில் பணியாற்றும் வெளிமாநில மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் வேலைக்கு செல்ல புறப்பட்டதால் விழுப்புரம் பேருந்து நிலையத்திலும், சுங்கச்சாவடியிலும் கூட்டம் அலைமோதியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிவடைந்து, இன்று  விழுப்புரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை, சேலம், திருச்சி போன்ற ஊர்களுக்கு அதிகாலையிலேயே பயணத்தை தொடங்கினர். அரசு, ஆம்னி பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மற்ற மாவட்டங்களுக்கு பயணத்தை தொடங்கினர்.

இதனால் நீண்ட தொலைவுக்கு அணிவகுந்து நிற்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் 30-க்கும் மேற்பட்ட காவலர்களும், சுங்கச் சாவடி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க: கால்நடை தொழில் தொடங்க நிதியுதவி - விழுப்புரத்தை சேர்ந்தவரா? நீங்களும் தொழில்முனைவோராகலாம்...

சென்னை மாநகரில் பணியாற்றும் வெளிமாநில மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் வேலைக்கு செல்ல புறப்பட்டதால் விழுப்புரம் பேருந்து நிலையத்திலும், சுங்கச்சாவடியிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் விழுப்புரத்திலிருந்து சென்னை போன்ற ஊர்களுக்கு   பொதுமக்கள் பயணத்தை தொடங்கினர்..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி, மதுரை என பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் பயணிகள் நெரிசல் காணப்பட்டது. பேருந்துகளில் கூட்டம் அலைமோதியதால் பயணிகள் படியில் அமர்ந்தபடியும் பயணம் செய்தனர்.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Villupuram