கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். இப்பண்டிகையை முன்னிட்டு இயேசுவின் பிறப்பை உலகிற்கு முன்னறிவிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம்.
அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணமாக வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.
மேலும் ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் குடில்களில் இடம் பெற்றிருக்கும். இந்த பொருட்களை விற்பதில் வியாபாரிகளும், வாங்குவதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அடுத்துள்ள வீர வாழி அம்மன் அம்மன் கோயில் தெரு, ரயில்வே நிலையம் ஆகிய பகுதிகளிலுள்ள கடை வீதிகளில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் தொங்கவிடப்படும் ஸ்டார்களின் விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பலவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வருகிறது. காகித ஸ்டார்கள், பிளாஸ்டிக் ஸ்டார்கள், எல்இடி ஸ்டார்கள்,5 ஸ்டார்கள்,7 ஸ்டார்கள், வால் ஸ்டார், சீரியல் லைட் ஸ்டார்,11 ஸ்டார் என பல டிசைன்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த வருடம் புதுவிதமாக எல்இடி வடிவமைப்பிலும், மேரி மாதா ஆகியோரது உருவத்தையும் கொண்டு ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்டார்கள் 25 ரூபாயில் தொடங்கி 850 ரூபாய் உள்ளது. அதுபோல, கிறிஸ்துமஸ் மரங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
மேலும், வியாபாரி கூறுகையில் “இந்த வருடம் புதுவகையான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. போன வருடத்தைவிட இந்த வருடம் விற்பனை அதிகரித்துள்ளது” என கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் கூறுகையில், “பல கடைகளில் பல்வேறு டிசைன்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 850 ரூபாய்க்கு எல்இடி ஸ்டார் விற்பனை உள்ளது இந்த ஸ்டார் 500 வண்ணங்களில் 500 வடிவங்களில் மாறுகிறது. எனவே இது போன்ற பல வித்தியாசமான ஸ்டார்களை வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram