ஹோம் /விழுப்புரம் /

கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் விழுப்புரத்தில் அமோக விற்பனை

கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் விழுப்புரத்தில் அமோக விற்பனை

X
கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் விற்பனை

Villuppuram District News : விழுப்புரத்தில் கிறிஸ்துமஸ் அன்று வீடுகளில் குடில்களை பெரும்பாலானவர்கள் கிருஸ்துவர்கள் அமைப்பார்கள். இவர்களை எதிர்நோக்கி தற்போது குடில் பொம்மைகளை விற்பனைக்கு வீதிக்கு வந்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் வருகிற 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி ஏசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்த குடில்களில் ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோர் சித்தரிக்கப்படுவர். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, கழுதை முதலிய பொம்மைகளும் இடம் பெறும். இவற்றை செய்ய தாள், அட்டை, கல் என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

கிறிஸ்துமஸ் அன்று வீடுகளில் குடில்களை பெரும்பாலானவர்கள் கிருஸ்துவர்கள் அமைப்பார்கள். இவர்களை எதிர்நோக்கி தற்போது குடில் பொம்மைகளை விற்பனைக்கு வீதிக்கு வந்துள்ளது. அந்த வகையில் ஏசு பிறப்பை உணர்த்தும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வீடுகளில் குடில்களில் வைப்பதற்காக, 18 பொம்மைகள் உள்ள ஒரு செட் பொம்மை ரூ.750 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இதையும் படிங்க : கிறிஸ்துமஸ் திருநாள்... மதுரை விளாச்சேரி பகுதியில் தயாராக உள்ள குடில் பொம்மைகள்.. 

அலங்கார சரவிளக்குகளை பொறுத்தவரை ரூ.100 முதல் ரூ.750 வரை விற்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை ரூ.500 முதல் ரூ.900 விலையில் விற்கப்படுகிறது. அதுபோல கிறிஸ்துமஸ் மரம் ரூ.50 முதல் ரூ.12 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

ஒளிரும் விளக்குகளுடன் கூடிய கிறிஸ்துமஸ் மரங்கள் ரூ.5,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் செட் ரூ.500 முதல் ரூ.7,000 வரை உள்ளது. குடில் வீடு ரூ.300 முதல் ரூ.1,500 வரை உள்ளது. அதேபோல் வண்ண வண்ண மணிகள், அலங்கார செடிகள், பூக்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆண்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தற்போது மழையும் ஓய்ந்துள்ளதால் வியாபாரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. அடுத்த மூன்று நாட்கள் இன்னும் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர் வியாபாரிகள்.

First published:

Tags: Local News, Vizhupuram