முகப்பு /விழுப்புரம் /

விக்கிரவாண்டியில் குளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம்.. 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிற்பம்..

விக்கிரவாண்டியில் குளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம்.. 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிற்பம்..

X
Chola

Chola sculpture found at Vikravandi.

Chola sculpture found at villupuram | தட்சிணாமூர்த்தி சிற்பம் இருக்கும் பகுதியில் ஏற்கனவே சிவாலயம் இருந்து மறைந்துள்ளது என ஆய்வில் கண்டுபிடிப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட எண்ணாயிரம் கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது சோழர் காலத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுபற்றி கூறிய செங்குட்டுவன், வரலாற்று சிறப்பு வாய்ந்த எண்ணாயிரம் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி மூர்த்தி குளம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தபோது விளை நிலங்களுக்கு நடுவே மரங்கள் புதர்கள் மண்டி இருக்கும் திட்டு போன்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி சிற்பம் காண்டுபிடிக்கப்பட்டது என்றும் வலது காலை தொங்கவிட்டு இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் அழகே உருவாக வீராசனத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார்.

4 கரங்களுடன் தலை அலங்காரத்துடன் காட்சி அளித்து காதுகள், கழுத்து, கை மற்றும் கால் களுக்கு அணிகலன்கள் அழகு சேர்ப்பதாகவும் வலது கால் முயலகன் மீது அழுத்திய நிலையில் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் காலம் கி.பி.10 அல்லது 11-ம் நூற்றாண்டு ஆகும். தட்சிணாமூர்த்தி சிற்பம் இருக்கும் பகுதியில் ஏற்கனவே சிவாலயம் இருந்து மறைந்துள்ளது என்றும் ஆவுடையார் உள்ளிட்ட தடயங்கள் இப்போதும் இங்கு காணப்படுவதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும். இப்பகுதியில் புதைந்துள்ள வரலாற்று தடயங்களை வெளியே கொண்டு வருவதற்கு கிராம மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்று கூறிய செங்குட்டுவன் மேலும் பல கிராமங்களில் இதுபோன்ற சிற்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

First published:

Tags: Local News, Villupuram