முகப்பு /விழுப்புரம் /

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. புதுப்பொலிவுக்கு தயாராகும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. புதுப்பொலிவுக்கு தயாராகும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்..

X
முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Villupuram Collector's Office Renovation : விழுப்புரத்தில் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  • Last Updated :
  • Viluppuram, India

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்கள் சென்று நேரில் ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ங்களில் வரும் 26ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன்படி, விழுப்புரத்தில் 3 மாவட்டங்களுக்கான ஆய்வுப்பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில், வரும் 26ம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அங்கு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதனையடுத்து வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் தனித்தனியாக கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர், விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் தங்கும் முதலமைச்சர் மறுநாள் 27ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், 3 மாவட்ட முக்கிய அதிகாரிகளுடன், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்த உள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் தூய்மை பணி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைப்படுத்தி, வர்ணம் பூசி, புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 26ம் தேதி முதலமைச்சரின் வருகையும், ஆய்வுக் கூட்டங்களும் நடைபெறுவதால் இந்தப் பணிகளை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: CM MK Stalin, DMK, Local News, Villupuram