விழுப்புரத்தில் நடைபெற்ற மல்லர் கம்ப போட்டி மற்றும் சிலம்பம் போட்டியில் மாணவர்கள் தீ பந்தம் ஏந்தி திறமையை வெளிப்படுத்தி நிகழ்ச்சி, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாரம்பரிய உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலையில் ஒன்றான மல்லர் கம்பத்தில் மனிதர்கள் உடலை வளைத்து சுழலும் மல்லர் கம்பம், கயிறு கட்டி அதில் சுழலும் கயிறு மல்லர்கம்பம், ஜிம்னாஸ்டிக், வில்வித்தை, சிலம்பம், களரி பயிற்று, தொங்கு இழை, யோகா போன்ற பல பாரம்பரிய விளையாட்டுக்களை தற்போதைய மாணவர்கள் கற்றுக்கொள்ளும் விதமாக மகாராஜபுரத்தில் கடந்த 20 தினங்களாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்த பயிற்சி வகுப்பு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு , விழுப்புரம் மாவட்டம் மல்லர் கம்பம் கழகம் மற்றும் கேலோ இந்தியா பயிற்சி மையம் இணைந்து கோடைப் பயிற்சி முகாம் நடத்தியது.
இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா மகாராஜபுரத்தில் உள்ள VPS மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகளில் கடலூர், நெய்வேலி, சென்னை, பண்ரூட்டி,விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியை பெற்று கொண்ட நிலையில் பயிற்சியின் நிறைவு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது.
நிறைவு விழாவில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கயிறு மல்லர்கம்பம், மல்லர் கம்பத்தில் பிரமிடு வடிவில் உடலை வளைத்து திறமையை வெளிபடுத்தினர்.
இதே போன்று சிலம்பத்தில் நெருப்பு வைத்து மாணவர்கள் சுழற்றியது, கயிறு மல்லர் கம்பத்தில் கையில் தீபந்தம் ஏந்தி பிரமிடு வடிவத்தில் மாணவர்கள் செய்தனர், முட்டை மேல் அமர்ந்து யோகா செய்வது போன்ற பல வித்தைகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அரங்கேற்றினர் .
அவர்கள் செய்த அனைத்து விஷயங்களும் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிபடுத்திய மாணவர்களுக்கு கேடயமும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த கோடைக்கால பயிற்சி நிறைவு விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மல்லர் கழக ஆசான்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.