முகப்பு /விழுப்புரம் /

புற்றுநோய் வராமல் தடுக்க இவையெல்லாம் கண்டிப்பா பண்ணுங்க.. விழிப்புணர்வு ஏற்படுத்திய விழுப்புரம் கலெக்டர்..

புற்றுநோய் வராமல் தடுக்க இவையெல்லாம் கண்டிப்பா பண்ணுங்க.. விழிப்புணர்வு ஏற்படுத்திய விழுப்புரம் கலெக்டர்..

X
மாதிரி

மாதிரி படம்

Cancer Awareness Bus : புற்றுநோய் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புரம் கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தை மாவட்ட ஆட்சியர் பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், “புற்றுநோய் என்பது இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படுகிறது. புற்றுநோய் ஒரு தீவிரமான நோய் ஆகும். புற்றுநோய் நமது உடலில் சத்தமில்லாமல் உருவாகி கொள்ளும் ஆட்கொள்ளியாகும்.

புற்றுநோய் வந்துவிட்டாலே இறப்பு என்ற நிலை இருந்து வந்தது, ஆனால், மருத்துவத்துறையின் அபரீத வளர்ச்சி காரணமாக தற்போது அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்தக்கூடிய அளவில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயின் தாக்கத்தினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்று வந்தால் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய முடியும்.

இதையும் படிங்க : இனி கோயம்பேடு போக வேண்டாம்... கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இவ்வளவு வசதிகளா?

புற்றுநோயானது, மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், கர்பப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்த புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மூளை புற்றுநோய், கணைய புற்றுநோய், தோல் புற்றுநோய் என பல்வேறு வகை புற்றுநோய் ஏற்படுகிறது.

புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்து

புகையிலைப்பொருட்கள், மது அருந்துவதை தவிர்த்தல், சத்தான சரிவிகித உணவு, காய்கறிகள், பழங்கள் மற்றம் நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளதுல், தவறாமல் உடற்பயிற்சி, எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருத்தல், பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றினை கடைபிடிப்பதன் மூலம் புற்றுநோய் வரமால் காத்திடலாம்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கடந்த 67 வருடங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் அதை தடுக்கும் பணியினை செய்துகொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றியும் அதை தடுக்கும் முறையை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், கலைநுட்படத்துடன் அதன் அறிகுறிகளை தகுந்த புகைப்படங்களுடன் கூடிய பேருந்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கியது.

இந்த விழிப்புணர்வு பேருந்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துவக்கி வைத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புற்றுநோயிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேருந்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள உள்ளது. மேலும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடையே வழங்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு பேருந்தினை பார்வையிட்டு, பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்கும் புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்” என தெரிவித்தார்.

    First published:

    Tags: Cancer, Local News, Villupuram