முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் புத்தக திருவிழாவில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பேருந்து..

விழுப்புரம் புத்தக திருவிழாவில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பேருந்து..

X
விழுப்புரம்

விழுப்புரம் புத்தக திருவிழாவில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பேருந்து

Villupuram News | சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அரசு பேருந்தில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களின் மத்தியில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு பேருந்து முழுக்க சாலை விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ஒரு பேருந்து முழுக்க சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் சாலைகளை பயன்படுத்தும் போது சரியான நடைமுறை எது தவறு எது என்பதை தெளிவாக விளக்கும் வரைபடங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியும், மாணவர்களுக்கு புரியும் வகையில் பொம்மைகளைக் கொண்டு டிஸ்ப்ளே ஆக வைத்திருந்தார்கள் இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் ஆசிரியர்கள் இதனையும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இது பற்றி மாணவர்கள் கூறுகையில் ” சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பேருந்து எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பொதுமக்கள் அனைவரும் சாலை வளைவுகளில் முந்தி செல்லாதீர்கள், இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் இது போன்று பல விதிமுறைகளை நிச்சயமாக இனி நாங்கள் பின்பற்றுவோம்” என கூறினர்.

    First published:

    Tags: Local News, Villupuram