ஹோம் /விழுப்புரம் /

போகி பண்டிகைக்கு இதையெல்லாம் கண்டிப்பா பண்ணாதீங்க..? விழுப்புரம் கலெக்டர் மோகன் முக்கிய அறிவுரை..

போகி பண்டிகைக்கு இதையெல்லாம் கண்டிப்பா பண்ணாதீங்க..? விழுப்புரம் கலெக்டர் மோகன் முக்கிய அறிவுரை..

போகி பண்டிகை

போகி பண்டிகை

Bhogi Festival 2023 : விழுப்புரம் மாவட்ட மக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

போகி பண்டிகை குறித்து விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு முக்கிய தகவலை கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முன்னோர் வாக்குப்படி கொண்டாடப்படும் இந்நாளில் பழைய, பயனற்ற பொருட்களை கழிப்பது வழக்கம். அடுத்த நாளான தை முதல் நாளில் இருந்து புதுமைகள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி போகியன்று, வீடுகளில் உள்ள பழைய துணிகள், பழைய பாய்கள், பயன்படுத்திய பிற பழைய பொருட்களை எரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இதனால் ஏற்படும் காற்று மாசுபாடு மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தப்படுகிறது.

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாடி காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Pongal 2023, Villupuram