முகப்பு /Viluppuram /

Villupuram : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்கள்..

Villupuram : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்கள்..

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District : விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

  • Last Updated :

விழுப்புரம் எம்.ஜி சாலையிலுள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து மூன்று கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் நகர பகுதிகளில் இயங்கி வரும் வணிக கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்படுவதாக நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், நகராட்சி உத்தரவின் பேரிலும் நகராட்சி அலுவலர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

எம் ஜி சாலையிலுள்ள கடைகளில் நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மூன்று கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள்,விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து கடைகளில் இருந்த 25 ஆயிரம் மதிப்பிலான ஒரு டன் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து மூன்று கடைகளுக்கு 7 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதுமட்டுமல்லாமல் , மாமிசக் கழிவுகளை சாலையில் கொட்ட கூடாது என்ற தடையை மீறி , கொட்டிய வாகன ஓட்டுனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதுக்கு இதுகுறித்து நகர் நல அலுவலர் பாலா கூறுகையில், தற்போது விழுப்புரத்தில் உள்ள வணிக வீதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தடை உத்தரவினை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

top videos

    மேலும் இது போன்ற ஆய்வுகள் விழுப்புரம் நகரத்தில் அடிக்கடி தொடரும் எனவும் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Local News, Plastic Ban, Villupuram