முகப்பு /செய்தி /விழுப்புரம் / வங்கி பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய காசாளர்... ரூ.40 லட்சத்துடன் தலைமறைவானவர் கைது

வங்கி பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய காசாளர்... ரூ.40 லட்சத்துடன் தலைமறைவானவர் கைது

கைதான முகேஷ்

கைதான முகேஷ்

தலைமறைவாக முடிவு செய்து சம்பவத்தன்று வங்கியில் இருந்து பணத்துடன் தப்பி சென்றுள்ளார். எடுத்து சென்ற பணத்தில் 3000 ரூபாய் மட்டுமே முகேஷ் செலவு செய்துள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூரை சேர்ந்த முகேஷ் என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார். கடந்த 25ஆம் தேதி வழக்கமாக வங்கி பணிக்கு வந்த இவர், திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வங்கியை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் முகேஷ் மீண்டும் வங்கிக்கு வராததால் வங்கி மேலாளர் பிரியதர்ஷினி, முகேஷ்சுக்கு  போன் செய்து பார்த்துள்ளனர். முகேஷின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து வங்கி மேலாளர் பிரியதர்ஷினி, காசாளார் முகேஷ் அறையை சோதனை செய்த போது வங்கியில் இருந்த ரூ. 43,89,500 ரொக்க பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்துள்ளார் அப்போது முகேஷ் பணத்தை பையில் வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக வங்கிமேலாளர் பிரியதர்ஷினி வங்கி சார்பாக விழுப்புரம் தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த விழுப்புரம் தாலுக்கா காவல்துறையினர், வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். மேலும் தப்பியோடிய வங்கி காசாளர் முகேஷசை பிடிக்க விழுப்புரம் உட்கோட்ட காவல் கண்கானிப்பாளர் பார்த்திப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பணத்துடன் சென்னையில் தலைமறைவாக இருந்த முகேஷை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். முகேஷிடம் நடத்திய விசாரனையில். கடந்த சில மாதங்களாக வங்கியில் உள்ள பல்வேறு வங்கி கணக்குகள் மூலமாக ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார் என்பதும், இதனால் 20 லட்சம் வரை பணத்தை இழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் இருந்த முகேஷ், தலைமறைவாக முடிவு செய்து சம்பவத்தன்று வங்கியில் இருந்து பணத்துடன் தப்பி சென்றுள்ளார். எடுத்து சென்ற பணத்தில் 3ஆயிரம் ரூபாய் மட்டுமே முகேஷ் செலவு செய்துள்ளார். மீதமுள்ள பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வங்கி காசாளரே பொது மக்களின் வங்கி கணக்கு மூலம் ரம்மி விளையாடி 20 லட்சம் வரை தோற்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் : குணாநிதி (விழுப்புரம்)

    First published:

    Tags: Crime News