ஹோம் /விழுப்புரம் /

சபரிமலையை போல விழுப்புரத்தில் இருக்கும் பம்பை ஆறு... இதற்கு இவ்வளவு சிறப்புகளா..!

சபரிமலையை போல விழுப்புரத்தில் இருக்கும் பம்பை ஆறு... இதற்கு இவ்வளவு சிறப்புகளா..!

விழுப்புரத்தில் இருக்கும் பம்பை ஆறு

விழுப்புரத்தில் இருக்கும் பம்பை ஆறு

Viluppuram District News : சபரிமலையை போலவே விழுப்புரத்தில் இருக்கும் பம்பை ஆற்றுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

சபரிமலையை போலவே விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பம்பை ஆற்றுக்கு இத்தனை பெருமைகள் இருக்கின்றவா என்றால் அது உண்மை தான். வாருங்கள் இந்த பம்பை ஆறு குறித்தும் நாம் பார்க்கலாம்.

பம்பை ஆறு என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கேரளா சபரிமலையில் இருக்கும் பம்பா ஆறு தான். ஆனால் பம்பை ஆறு வேறு பம்பா ஆறு வேறு. இந்த பம்பை ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் 50 கி.மீ தூரம் பாய்கிறது.

பெரிய ஆற்றில் இருந்து பிரியும் ஆற்றை கிளை ஆறு என்றும், பெரிய ஆற்றில் சேரும் சிறிய ஆற்றை துணை ஆறு என்றும் கூறுகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் கிளையாக பிரிந்து செஞ்சி சங்கராபரணி ஆற்றில் துணை ஆறாக கலக்கிறது.

தென்பெண்ணை ஆறு திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து இந்த பம்பை ஆறாக பிரிகிறது. இந்த பம்பை ஆற்றுக்கு கண்டாச்சிபுரம் ஏரியில் இருந்தும், தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் வெள்ளநீர் உபரியாக வந்து இந்த பம்பை ஆற்றில் கலக்கிறது.

இதையும் படிங்க : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி...

இந்த ஆறு மிகவும் பழமையான ஆற்றங்கரை நாகரீகத்தின் பிறப்பிடமாகவும் இருந்துள்ளது. பம்பை ஆற்றை 1300 ஆண்டுகளுக்கு முன் திருஞான சம்பந்தர் மிகவும் புகழ்ந்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

திருவாமுகத்தூர் என்ற ஊர் இந்த ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. மேலும், இந்த ஊரில் சிவாலயமும் அமைந்துள்ளது. இது தனிச்சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த பம்பை ஆற்றில் நீங்கள் குளித்தும் மகிழலாம். நீராடி விட்டு பிறகு அருகே உள்ள கோயிலுக்கும் செல்லலாம். இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களாலும் நிறைய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றை வரலாற்றுடனும் தொடர்பு படுத்தி பொதுமக்கள் பார்க்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பம்பை ஆறு விழுப்புரத்தில் 50 கி.மீ தூரம் பாய்ந்து விளை நிலங்களுக்கும் பாசனத்தையும் கொடுக்கிறது. இது வாழ்வியலாகவும், சுற்றுலா தலமாகவும் இந்த பம்பை ஆறு பார்க்கப்படுகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram