விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தில் விவசாயிகள் கம்பு சாகுபடியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நல்ல லாபம் தரக்கூடிய பயிராக இருப்பதால் விவசாயிகள் இதனை சாகுபடி செய்கின்றனர்.
விழுப்புரத்திலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆயந்தூர். இக்கிராமத்தினரின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. தர்ப்பூசணி, பூசணிக்காய், நிலக்கடலை என அந்தந்த பருவத்திற்கு ஏற்றாற்போல பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஆயந்தூர், சென்னகுணம் சுற்றுவட்டார பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேலாக கம்பு (மொட்டை கம்பு) பயிரிட்டுள்ளனர்.
கம்பு பயிரிட ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவிடுகின்றனர். ஒரு கிலோ கம்பு, 250 ரூபாய்க்கும், ஒரு மூட்டை 2,000ல் இருந்து 2,300 வரை விலை போகிறது. ஆள் கூலி, உரம், களை எடுத்தல் போன்றவற்றுக்கு போக வருமானம் என்று பார்த்தால் 10,000 முதல் 15 ரூபாய் வரை இருக்கிறது. லாபமோ நஷ்டமோ விவசாயம் என்பது குலத்தொழிலாக இருப்பதால் அதனை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம் என்று அக்கிராம விவசாயிகள் கூறுகின்றனர்.
விழுப்புரம் பகுதியில் மழை பொழிவு காரணமாக கம்பு விளைச்சல் செழிப்பாக உள்ளது. மேலும் தற்போது நல்ல மகசூல் தரும் என்ற எண்ணத்தில் கம்பை பயிரிட்டுள்ளோம் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர்: சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.