முகப்பு /விழுப்புரம் /

சிலம்பம் சுற்றி தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய விழுப்புரம் மாணவர்கள்

சிலம்பம் சுற்றி தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய விழுப்புரம் மாணவர்கள்

X
விழிப்புணர்வை

விழிப்புணர்வை ஏற்படுத்திய விழுப்புரம் மாணவர்கள்

Villupuram News | தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு,அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சி மொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 01.03.2023 முதல் 08.03.2023 வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டது. அதன் முக்கிய நிகழ்வாக தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் தனித்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் நிறைவடைகிறது. விழிப்புணர்வில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடம் தமிழ்மொழியில் கையொப்பமிட வேண்டும், தமிழ்மொழியில் பெயர்ப்பலகை வைத்திட வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை அனுமதி!

தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவம் மற்றும் சிறப்பு குறித்து இன்றைய தலைமுறை இளைஞர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழ்மொழியினை அனைவரும் கற்றிட வேண்டும் என்பதற்காகவும் தாய்மொழியான தமிழ்மொழியில் நாம் கல்வி பயிலும்போது உள்ளார்ந்த கருத்துடன் கல்வி பயில இயலும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது” என  விழுப்புரம்  மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Villupuram