Home /viluppuram /

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு புத்துயிர் அளிக்கும் ஓவியங்கள் - பொதுமக்களிடம் வரவேற்பு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு புத்துயிர் அளிக்கும் ஓவியங்கள் - பொதுமக்களிடம் வரவேற்பு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஓவியங்கள்

Villupuram District News: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய சுவர்களில், நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இந்த ஓவியங்கள் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் மோகன்.

இதனை அடுத்து நகராட்சி சார்பில் ஓவியர்களை கொண்டு மரங்களை வளர்க்க வேண்டும், குப்பைகளை கொட்ட கூடாது, நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது, மழை நீரை சேகரிக்க வேண்டும், வெப்பமயமாதல், தொழிற்சாலைகள் அதிகரித்தல், இயற்கைக்கு உதவ வேண்டும், நெகிழி பயன்படுத்தக்கூடாது, மஞ்சப்பை உபயோகப்படுத்த வேண்டும் போன்ற தலைப்பின்கீழ் ஓவியர்கள் புதிய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

பேருந்து நிலைய சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்..


இந்த விழிப்புணர்வு ஓவியங்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு  புத்துயிர் அளித்துள்ளது. மேலும் விழிப்புணர்வு ஓவியங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பேருந்து நிலைய சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்..


பேருந்து நிலைய சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்..


மேலும் இந்த விழிப்புணர்வு ஓவியங்கள் பற்றி  பொதுமக்கள் கூறியதாவது,   “புதிய பேருந்து நிலையத்தில் இதுபோன்ற சுவர் ஓவியங்கள் வரைவது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இங்கு பல்வேறு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது.

பேருந்து நிலைய சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்..


இந்த ஓவியங்கள் பார்ப்பது மட்டுமல்லாமல் இதில் குறிப்பிடப்பட்டது நம் வாழ்வில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், இதுபோன்ற சுவர் ஓவியங்கள் வரைந்த சுவர்களில் போஸ்டர்கள் மற்றும் சிறுநீர் கழிக்கக்கூடாது பொதுமக்கள் இதுபோன்ற செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும்” என கூறினார்கள்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி