முகப்பு /விழுப்புரம் /

"சத்தான உணவுகளை உண்ண வேண்டும்" விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி!

"சத்தான உணவுகளை உண்ண வேண்டும்" விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி!

X
விழிப்புணர்வு

விழிப்புணர்வு பேரணி

Villupuram News | விழுப்புரத்தில் சிறுதானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான, சத்தான உணவுகளை உண்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், நடைபெற்ற ஊட்டச்சத்து இரு வார நிறைவு விழாவினை முன்னிட்டு, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊட்டச்சத்து இருவார நிறைவு நாளில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊட்டச்சத்து வாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், ”அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஊட்டச்சத்து இரு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்டத்தில், 20.03.2023 முதல் 03.04.2023 வரை ஊட்டச்சத்து இரு வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதன் நோக்கம், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் குழந்தையின் முதல் 1000 நாட்கள், இரத்தசோகை, முறையான கை கழுவுதல், சுகாதார மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.

இதையும் படிங்க | கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு வடை எடுத்து பிள்ளையார்குப்பம் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் செயல்படும் 1781 அங்கன்வாடி மையங்களில், சிறுதானியங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புனர்வு ஏற்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய எடை மற்றும் உயரம் கண்காணித்தல், மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி மையங்களை பிரபலப்படுத்துவது ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த படுத்தப்பட்டது.

First published:

Tags: Local News, Villupuram