விழுப்புரத்தில் ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்று திரண்டு ”ரோபோடிக்ஸ்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர்.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள்கலந்து கொண்டு ”ரோபோடிக்ஸ்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர்.
மனிதனை காட்டிலும் அதிக துல்லியமாக தன்னிச்சையாக இயங்கும் இயந்திர மனிதன் என்னும் ரோபோக்களால் தான் இனி உலகமே இயங்கும் என்ற நிலை வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதை குறித்த கல்வியே ரோபோடிக்ஸ் எனப்படும்.
இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் கிராமத்தில் பிறந்து அமெரிக்கா வரை ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் கால்பதித்த வில்லேஜ் விஞ்ஞானி பாலாஜி திருநாவுக்கரசுக்கு பெரிய ஆசை வந்தது.
சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, ரோபோக்களின் மீதான காதலால், தொடர் முயற்சி செய்து ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் என ஏழு நாடுகள் பயணித்து, அவருடைய ரோபோ கண்டுபிடிப்புகளின் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். 4 சர்வதேச விருதுகள் உட்பட பல விருதுகளை குவித்துள்ளார் பாலாஜி.
இவர் தமிழ்நாடு ரோபோட்டிக்ஸ் கிளப் வில்லேஜ் நிறுவனர் ஆவார். பாலாஜி பல அரசு பள்ளிகளில் சென்று மாணவர்கள் மத்தியில் ரோபோட்டிக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், Robotics Foundation Of Tamilnadu,Village Technology School, மற்றும் Rabba Book Of World Records சார்பில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள்கலந்து கொண்டு ”ரோபோடிக்ஸ்” என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இதில் ஆயிரம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் ரோபோடிக்ஸ் குறித்து கட்டுரை எழுதினர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சசிகலா தலைமை தாங்கினார். விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
”ரோபோடிக்ஸ் போன்ற துறைகளில் மாணவிகள் பங்கெடுத்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்று விஞ்ஞானி பாலாஜி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மாணவிகள் முன்னிலையில் ரோபோட் ஒன்று வைக்கப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, ரோபோக்களைக் கொண்டு எந்தவிதமான பயன்பாடுகளையும் எளிதில் மேற்கொள்ள முடியும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் பள்ளி நிர்வாகத்துக்கு ரபா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.