ஹோம் /விழுப்புரம் /

ஆசிய அளவிலான 2022 சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி - விழுப்புரம் வீரர்கள் சாதனை.. சர்வதேச போட்டிக்கு செலக்ட்.....

ஆசிய அளவிலான 2022 சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி - விழுப்புரம் வீரர்கள் சாதனை.. சர்வதேச போட்டிக்கு செலக்ட்.....

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Silambam Players | விழுப்புரம் தமிழச்சி சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி வாகை சூடி சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் நடத்திய இன்விடேஷனல் ஆசிய அளவிலான சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் - 2022 போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றனர்.

விழுப்புரம் காமதேனு நகரில் தமிழச்சி சிலம்பம் பயிற்சி பள்ளி 4 ஆண்டுகளாக இயங்கி வந்தது. பின்னர் இடப்பற்றாக்குறையால், பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் சிலம்பப் பயிற்சி பள்ளி இயங்கி வந்தது .

இந்த சிலம்ப பள்ளிக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து மாணவ மாணவிகள் வருகின்றனர். எம்.எ ஆங்கிலம் படித்து முடித்த சிலம்ப பயிற்சியின் பயிற்சியாளரான தமிழச்சி அன்பரசி கடந்த 10 வருடங்களாக சிலம்பம் பயின்று அதன் பிறகு சிலம்பப் பயிற்சி பள்ளி தொடங்கியவர்.

மேலும் படிக்க:  விழுப்புரத்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

தமிழச்சி சிலம்பம் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அக்டோபர் 01.10.22 - 02.10.22 தேதிகளில் சென்னை முகப்பேரில் உள்ள டிகாத்லான் விளையாட்டு மைதானத்தில், உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் நடத்திய இன்விடேஷனல் ஆசிய அளவிலான சிலம்பம் ஓபன் சாம்பியன் ஷிப் 2022 ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் விழுப்புரம் தமிழச்சி சிலம்பம் பயிற்சி பள்ளியில் இருந்து 33 வீரர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி வீரர்கள் தற்காப்புத் தொடுமுறை சிலம்பம் போட்டியில், முதலிடத்தை 3 மாணவர்கள் பெற்றனர், அதன்பின் 2 மற்றும் 3ம் இடங்களை வேறு வீரர்கள் வென்றனர் .

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

மொத்தமாக இப்பள்ளியில் இருந்து 21 சிலம்ப வீரர்கள் வெற்றிவாகை சூடினர். இதில் முதலிடத்தை பிடித்த விஜி ஐயப்பன், நேகா ஸ்ரீ, வசீகரன் சிங்கப்பூரில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் சிலம்பப் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றிருக்கின்றனர். போட்டியில் வெற்றி கண்ட வீரர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெற்றிவாகை சூடாத வீரர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி வாகை சூடிய சிலம்ப வீரர்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, வீரர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram