ஹோம் /விழுப்புரம் /

கலைத்துறை பயிற்சி வகுப்புகள் - விழுப்புரம் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கலைத்துறை பயிற்சி வகுப்புகள் - விழுப்புரம் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

Arts and Culture Department training in Villupuram | விழுப்புரத்தில் கலை பண்பாட்டு துறையின் கலை பயிற்சி வகுப்புகளுக்கான பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி இருப்பதாக தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் கலை பண்பாட்டு துறையின் கலை பயிற்சி வகுப்பு குறித்த விவரத்தை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையத்தில், குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு வாரந்தோறும் நடத்தப்படும்.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட அரசு இசை பள்ளியில், (நீதிமன்ற சாலை) சனிக்கிழமை மாலை 3 முதல் மாலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை கலை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் 51 வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை - கலெக்டர் தகவல்

5 முதல் 16 வயது உள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் இக்கலை பயிற்சி வகுப்பில் ஆண்டு பயிற்சி கட்டணமாக ரூ.200 செலுத்தி விருப்பமுள்ள கலை பிரிவை தேர்வு செய்து பயிற்சி பெறலாம்.

இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட கலை போட்டிகள், மாநில கலை போட்டிகள், உள்ளூர் அளவிலான இளந்திரு விருது, தென் மண்டல அளவிலான இளந்திரு விருது, டெல்லியில் நடக்கும் குழந்தைகள் தின விழா, உலக சுற்றுச்சுழல் தின மாநாடு, ஆகியவற்றில் சவகர் சிறுவர் மன்ற மாணவர்கள் தயார் செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கலை பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாக, சவகர் சிறுவர் மன்ற, திட்ட அலுவலர் ராஜன்பிரகாசத்தை 9444271492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram