முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் புத்தக திருவிழா.. பறை இசை நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்!

விழுப்புரத்தில் புத்தக திருவிழா.. பறை இசை நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்!

X
புத்தக

புத்தக திருவிழாவில் நடைபெற்ற பறை இசை நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்

Villupuram News | புத்தக திருவிழாவில் நடைபெற்று வந்த கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பறை இசையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பறை இசையில் அரங்கமே அதிர்ந்து போனது. அது மட்டுமல்லாமல் ஈரோடு மகேஷ் நகைச்சுவை பேச்சிலும் பொதுமக்கள்  மகிழ்ந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் மாபெரும் புத்தக திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் மாணவர்களை ஊக்கவிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் புது புது விருந்தினர்கள் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் என பலர் வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாது விருந்தினர்கள் பேசுவதை கவனமாக கேட்டு மாணவர்கள் தங்களுக்கு புரிந்த விஷயங்களை பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியரிடம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மகேஷ் விருந்தினராக வருகை புரிந்து ”புத்தகம் பேசுது” என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை தன்னுடைய நகைச்சுவை பேச்சின் மூலம் தெரிவித்தார். பொதுமக்களும் இந்த பேச்சைக் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.

புத்தக திருவிழாவிற்கு வருகை புரிந்த பொதுமக்களை மேலும் உற்சாகமூட்டும் விதமாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பறை இசை கரகாட்டம் என நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கண்டுகளித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Villupuram