விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் மூலம் தொல்லியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியில் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் சோழர் காலத்தில் பயன்படுத்திய பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் சார்பாக தொல்லியல் கண்காட்சி நடைபெற்றது. தொல்லியல் கண்காட்சியில் கீழடி மற்றும் தென்பெண்ணையாறு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால பொருட்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியில் முதுகலை வரலாறு 2ம் ஆண்டு பயிலும் நவின் என்ற மாணவன் பழமையான பொருட்களை பற்றி நம்மிடம் பல சுவாரசியமான விஷயங்களை பகிர ஆரம்பித்தார். இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருள்கள் ஆகும். இந்த கண்காட்சியில் புதிய கற்காலம் பழைய கற்காலம், இரும்பு காலம், சங்க காலம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய காலத்தில் அப்போதே தமிழகத்தில் பயன்படுத்திய பொருட்கள் என பல காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது .
புதிய கற்காலத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்கு பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய கருவிகள், சுத்தியல், பழங்காலத்தில் பயன்படுத்திய செப்பு கலந்த மோதிரங்கள் கூடுவை என பல பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் சிந்து சமவெளி நாகரிகம் குறியீடு உள்ள பானை ஓடுகள் நமக்கு தென்பெண்ணை ஆற்றில் கிடைத்துள்ளது.
மேலும் ஈம தாழிகள், நட்சத்திர குறியீடு போட்ட பானை ஓடுகள். சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சிவப்பு கருப்பு கலந்த பானை ஓடுகள் அல்லது கருப்பு மற்றும் சிவப்பு மண்பானைகளே பயன்படுத்தி வந்தனர் என்பதற்கான சான்றுகள், கெண்டி மூக்கு பானை, உறை கிணறு சுடுமண் பொம்மை, சிறுவர்கள் விளையாட பயன்படுத்தி சில்லி ஓடுகள், புகைபிடிப்பான், சுடுமண் அகல் விளக்கு, செப்பேடுகள், அலெக்சாண்டர், கிளியோபாட்ரா பயன்படுத்திய நாணயங்கள் ஆகியவை இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் பழங்கால மக்கள் பயன்படுத்திய அதிக எடை கொண்ட காதணிகளை கல்லூரி மாணவ, மாணவிகள் வியப்புடன் பார்த்து சென்றனர். நாங்கள் இவற்றை பாட புத்தகத்தில் மட்டுமே பார்த்து உள்ளோம். இத்தனை சிறப்பு வாய்ந்த தொன்மையான பொருட்களைபார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram