Home /viluppuram /

விழுப்புரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பமா... இதோ விண்ணப்பிக்கும் வழிமுறை

விழுப்புரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பமா... இதோ விண்ணப்பிக்கும் வழிமுறை

விழுப்புரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

VILLUPURAM: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வரும் பொருட்களில் ஒன்று பட்டாசு. அவ்வாறு, பட்டாசு விற்பனைக்காக மாவட்டந்தோறும், தற்காலிக பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, விழுப்புரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-  தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கோருபவர்கள் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு


தற்காலிக உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பம், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல். உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில் இடத்தின் கட்டட உரிமையாளரிடம் 20 ரூபாய்க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உரிம கட்டணம் 600 ரூபாய் உரிய அரசு கணக்கில் இ-சலான் மூலம் செலுத்த வேண்டும்.

அதற்கான அசல் செலுத்துச் சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, பாஸ்போர்ட் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் சேவைக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்தி பொது இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பங்களை அரசு உத்தரவின்படி வரும் 30ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி