விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஜனவரி மாதத்திற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் அலங்கார நகை தயாரித்தலுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கான நேர்காணல் இன்று (31.12.2022) சனிக்கிழமை நடைபெற்றது.
மேலும் நேர்காணலில் கலந்துகொண்டவர்களில் தகுதியான நபர்களுக்கு (02.01.2023 ) அன்று பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 13 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இந்த இலவச இப்பயிற்சி வகுப்பிற்கு 18 முதல் 45 வயது வரையிலும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் நேர்காணலுக்கு வருகை தரும் போது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் வாக்காளர் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு இயக்குநர் விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மாம்பழப்பட்டு ரோடு, ES பள்ளி எதிர் தெரு அலமேலுபுரம் விழுப்புரம். தொடர்புக்கு: 04146 - 294 115, 7598466681
என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram