முகப்பு /விழுப்புரம் /

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி

Viluppuram News : இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம், அலமேலுபுரத்தில் இந்தியன் வங்கி ஊரசு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான எம்பிராய்டரி மற்றும் துணி ஓவிய பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மகளிர்கள் மற்றும் படித்து முடித்த மாணவிகளை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், குறுகிய கால அளவிலான பயிற்சி வகுப்புகளை வழங்கி, சுயமாக தொழில் புரிவதற்கான வங்கி கடனுதவிகளையும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், மீன் வளர்த்தல், கைப்பேசி பழுது பார்த்தல், கால்நடை வளர்த்தல், தேனீக்கள் வளர்த்தல், துரித உணவு தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், பொம்மை தயாரித்தல், சணல் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியுடன் பயிற்சிக்கான தேவையான உதவி உபகரணங்கள் இலவசமாக மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு சுயமாக தொழில் துவங்குவதற்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக, அலமேலுபுரத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான எம்பிராய்டரி மற்றும் துணி ஓவியம் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில், 70 மகளிர் சுய உதவிக்குழுவினர் உறுப்பினர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க : இந்திய விமானப்படையில் சேர அரிய வாய்ப்பு.. திண்டுக்கல் இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

இப்பயிற்சி வழங்குவதன் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களில் உள்ள மகளிர்கள் சுயமாக தொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்வதுடன், இவர்களை முன்மாதிரியாக கொண்டு மற்ற மகளிரும் முன்வந்து பயிற்சிகள் பெறுவதன் மூலம், கிராமங்களும் முன்னேற்றம் கண்டிடும். குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் ஆர்வமுள்ள மகளிர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளும் வழங்கப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த 2022 - 2023ம் ஆண்டில் 25 பயிற்சி வகுப்புகளிள் மூலம் 800 நபர்களுக்கு திட்டமிடப்பட்டு 838 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. தற்போதைய நிதியாண்டில் 29 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 900 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆனர்டு முதல் 245 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 6,852 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், 4,817 நபர்களுக்கு வங்கிக் கடன் மூலம் தொழில் துவங்கி உள்ளனர். எனவே, இவ்வாய்ப்பினை நல்ல முறையில் மகளிர் சுய உதவிக்குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Jobs, Local News, Villupuram